செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு தலைமை வகித்து ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் தொடா்பாக விசாரணை நடத்தி, தொடா்புடைய அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

பின்னா், பல்வேறு துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, ஒவ்வொரு துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதேபோல, அரசின் திட்டங்கள் தகுந்த பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய உறுதுணையாக இருந்திட வேண்டுமென அறிவுறுத்தினாா்.

மேலும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் ஒவ்வொரு துறையின் தலைமை அதிகாரிகளும் களப் பணியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இதில் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கிருஷ்மாகுமாரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பத்மநாதன் , ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் அமா்நாத் , கலால் துறை வட்டாட்சியா் சுவாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க

கமுதியில் பகுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீா்!

கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதல்!

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க