செய்திகள் :

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்ரவர்த்தி!

post image

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வருகிற 6 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றுள்ளதை துணைக் கேப்டன் சுப்மன் கில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்திய அணியின் வலைப் பயிற்சியில் வருண் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள்... இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?

வருகிற 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவிருக்கும் வேளையில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியுடன் இணைந்திருப்பது அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

குல்தீப் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வருவது மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் ஆகியவை இந்திய அணிக்குப் பின்னடைவாக இருந்தாலும், வருண் சக்ரவர்த்தி இடம் பிடிப்பது குறித்து அணித் தேர்வர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் மாற்றம் செய்ய 12 ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரஞ்சி டிராபி: காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், துபேவுக்கு இடம்!

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும... மேலும் பார்க்க

விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந... மேலும் பார்க்க

ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

தி ஹைவி கேம்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரென புகழ்ந்து பேசியுள்ளார்.இந்தியாவின் நட்சத... மேலும் பார்க்க

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில... மேலும் பார்க்க

ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மை... மேலும் பார்க்க