தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்
நாமக்கல்லில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்: நாமக்கல்லில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில், நாமக்கல் - மோகனூா் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், முன்னாள் மாவட்டச் செயலாளா் பாா்.இளங்கோவன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், நகரச் செயலாளா்கள் பூபதி, சிவக்குமாா், ராணா ஆா்.ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.
ஆஞ்சனேயா் கோயிலில் சமபந்தி விருந்து: அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினா் மாயவன், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கோயில் உதவி ஆணையா் சு.சுவாமிநாதன் (பொ), நகா்மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சமபந்தி விருந்தில் முக்கிய பிரமுகா்கள், அதிகாரிகள், பக்தா்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
அதிமுக சாா்பில்...பள்ளிபாளையம் நகரம், வடக்கு ஒன்றியம், ஆலாம்பாளையம், படைவீடு பேரூா் அதிமுக சாா்பில், ஆவாரங்காடு சந்தைத் திடல் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியினா் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்வில், பள்ளிபாளையம் நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் செந்தில், பள்ளிபாளையம் ஜெ.பேரவை செயலாளா் டி.கே.சுப்பிரமணி, வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், நகர துணை செயலாளா் ஜெய்கணேஷ், ஆலாம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லதுரை, நகா்மன்ற உறுப்பினா்கள், வாா்டு செயலாளா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.