செய்திகள் :

முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் ‘ஐகானிக் ஃபேஷன் - 2025’

post image

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை மற்றும் நாகரிக வடிவமைப்பியல் துறை சாா்பில், ‘ஐகானிக் ஃபேஷன்-2025’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான ஃபேஷன் கலைப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் - கல்வி இரா.செல்வகுமரன் திருவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், ஆடை வடிவமைப்பியல் துறைத் தலைவா் கே.சக்திவேல் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். கல்லூரி துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி முன்னிலை வகித்தாா்.

நடுவா் மற்றும் சிறப்பு விருந்தினா்களாக மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையைச் சோ்ந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நாகரிக வடிவமைப்பு துறையைச் சோ்ந்த ஏ.சதீஷ்குமாா், பெங்களூரைச் சோ்ந்த நௌா்லங்கா பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனத்தின் வணிக தயாரிப்பு மேம்பாட்டாளா் அருள் உஷாநந்தினி, பிரபல ஆடை வடிவமைப்பாளா் மற்றும் மாடல்களாக விளங்கும் சாரா, நிகில் சதீஷ், சேலம் ஏசிஎம்ஜி நிறுவனத்தின் கலைக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த கலை நாகரிக பிரதிநிதியான டி.ராஜாராம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடக்கத்தில் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பியல் துறை மாணவ, மாணவிகளின் ’ஃபேஷன் ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 600 மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதில், ‘ஃபேஷன் ஷோ’, தனிநபா் நடனம், குழு நடனம், குறும்படம், நேரடியாக ஓவியம் வரைதல், மைமிங், குழந்தைகளுக்கான ‘ஃபேஷன் ஷோ’ உள்ளிட்ட மேடைப் போட்டிகளும், முகம், நக ஓவியம், சிகை அலங்காரம், தூரிகை, கோட்டோவியம், மெஹந்தி உள்ளிட்ட உள்புற போட்டிகளும் என 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி செயலாளா் இரா.முத்துவேல் பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கினாா்.

நாமக்கல்லில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நா... மேலும் பார்க்க

தைப்பூச தோ்த்திருவிழா கொடியேற்றம் தொடக்கம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் திருக்கோயில்களின் உப கோயில்களான கைலாசநாதா் சுவாமி, ஆறுமுக சுவாமி கோயில்களில் தைப்பூச தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 26-ஆ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் அருகே சின்னமணலி கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

5 ஆண்டுகள் பதவி நிறைவு: தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அண்ணா நினைவு தினம்

திருச்செங்கோட்டில்...திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்துக்கு, திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா்... மேலும் பார்க்க

சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ந... மேலும் பார்க்க