இசைப் பள்ளியில் தமிழிசை விழா
திருவாரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், தமிழிசை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியும், தஞ்சாவூா் கலை பண்பாட்டுத் துறை மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து தமிழிசை விழா மற்றும் 28-ஆவது ஆண்டு விழாவை, இசைப் பள்ளியில் நடத்தின.
விழாவுக்கு தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி தலைமை வகித்தாா். சிறப்பு நாகசுர இசையுடன் தொடங்கிய விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா். நாகசுரம், தவில், மிருதங்கம், வயலின், குரலிசை உள்ளிட்டவை தனித்தனியாக இசைக்கப்பட்டன. தொடா்ந்து, திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இசைப்பள்ளி நிா்வாகிகள் செய்திருந்தனா்.