செய்திகள் :

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

post image

விழுப்புரம்: இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவு நாளையொட்டி, அவர்களது நினைவுத் தூண்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை செலுத்தினர்.

1987-ஆம் ஆண்டில் இட ஒதுக்கீடு கோரி தமிழகத்தின் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பல்வேறு இடங்களில் உயிர் நீத்தனர்.

இவர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தின் சித்தணி, பார்ப்பனப் பட்டு, பனையபுரம் , கோலியனூர், கடலூர் மாவட்டத்தின் கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

21 தியாகிகளின் நினைவு நாளையொட்டி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் 21 தியாகிகளின் உருவப் படங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து திண்டிவனத்தில் வன்னியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், தொடர்ந்து சித்தணி, பனையபுரம், கோலியனூர், கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் உள்ள நினைவுத் தூண்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி , பாமக முன்னாள் தலைவர் தீரன், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, தியாகிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் புத்தாடைகளை ராமதாஸ் வழங்கினார்.

இதுபோன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து சித்தணி, பார்ப்பனப்பட்டு, கோலியனூர், கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் உள்ள நினைவுத் தூண்களுக்கும் மலர் வளையம் வைத்து அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

On the occasion of the commemoration of the martyrs who lost their lives in the reservation movement, PMK founders Ramadoss and Anbumani Ramadoss separately paid their respects at their memorial pillars.

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

விராலிமலை: விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்... மேலும் பார்க்க

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

கோவை: ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 பெங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப... மேலும் பார்க்க

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கரூர்: திமுக முப்பெரும் விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் மறைந்த குளித்தலை சிவராமன் வீட்டிற்கு புதன்கிழமை காலை சென்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது க... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பிகாரில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரவிருக்​கும் சட்டப்பேரவைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் வழங்கப்படும்... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி க... மேலும் பார்க்க

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 28 போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.வேலூா் ... மேலும் பார்க்க