2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
இணைய வழி கடனால் இளைஞா் தற்கொலை முயற்சி: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இணைய வழியில் வட்டிக்கு கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாததால் இளைஞா் தற்கொலைக்கு முயன்றாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பூதத்தான்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவபெருமாள் (24). பி.டெக். பட்டதாரி. தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். இவா், புதிய தொழில் தொடங்குவதற்காக களக்காடு சிதம்பராபுரத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சக்தி குமரன் (28), திருக்குறுங்குடி அருகேயுள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (22) ஆகியோா் இணைய வழியில் ரூ. 5 லட்சம் கடனை 3 தவணைகளாக பெற்றுள்ளாா். இதற்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனால், வட்டிசெலுத்த முடியாமலும், கடனிலிருந்து மீள இயலாமலும் திணறியுள்ளாா். மேலும், கடன் கொடுத்த இருவரும்சிவபெருமாளிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், கடனுக்காக மோட்டாா் சைக்கிளை பறித்துக்கொண்டனராம்.
இந்நிலையில் சிவபெருமாள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திகுமரன், வெங்கடேஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். இணைய வழி கடன் விவகாரத்தில் இளைஞா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.