செய்திகள் :

இது டான் 2 அல்ல, டிராகன்..! நல்ல வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்த இயக்குநர்!

post image

டிராகன் படத்துக்கு வரும் ஆதரவுக்கு நெகிழ்ச்சியடைந்துள்ளார் பேசியுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இன்று (பிப். 21) திரையரங்குகளில் வெளியானது.

டிராகன் போஸ்டர்.

டிரைலரைப் பார்த்து சமூக ஊடகங்களில் இது டான் 2 என கிண்டல் அடிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் பங்கேற்ற பல்வேறு நேர்காணல்களிலும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “படம் வரட்டும் தெரியும்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க:கெத்தாகக் கலக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்? டிராகன் - திரை விமர்சனம்!

காலையில் பூம்பாறை முருகன் கோயிலில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சாமி தரிசனம் செய்திருந்தார்.

தற்போது, படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியடைந்து திரையரங்கு ஒன்றில், “இது டான் 2 அல்ல, டிராகன்” எனக் கூறி நடிகர் பிரதீப், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களை நெகிழ்ச்சியாக கட்டிப் பிடிப்பார்.

இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

ஓ மை கடவுளே இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கு இது 2ஆவது படம். அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

காதலை தெரிவித்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம்..! ரகசியம் பகிர்ந்த டாப்ஸி!

நடிகை டாப்ஸி பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்ததாகக் கூறியுள்ளார். டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ என்பவரை காதலித்து மார்ச் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.கணவருடன் நடிகை டாப்ஸி. 3... மேலும் பார்க்க

ஜென்டில்வுமன் டிரைலர்!

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் ... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி... சிவபக்தர்கள் கொண்டாடும் இடங்கள்!

2025 மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினம் தான் மகா சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரியானது எல்லா வகையான ... மேலும் பார்க்க

மோகன்லால் - ஷோபனா படத்தின் முதல் பாடல்!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ்திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இத... மேலும் பார்க்க

டிராகன் திரைகள் அதிகரிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படத்திற்கான காட்சிகள் அதிகரித்துள்ளன.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நேற்று (பிப். 21) திரையரங்குகளில் வெளியானது.க... மேலும் பார்க்க

நேர்மையாக இருப்பவர்களுக்கு ஆப்ஷன் பி வேண்டும்: டாப்ஸி

எல்லோரும் நினைப்பது போல திரைத்துறை வேலை செய்ய உகந்த இடம் கிடையாதென நடிகை டாப்ஸி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில... மேலும் பார்க்க