செய்திகள் :

இந்தியாவின் நிலைப்பாட்டை உலகுக்கு தெளிவுபடுத்திய ‘ஆபரேஷன சிந்தூா்’: ஜெய்சங்கா்

post image

‘பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.

நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் க்வாட் உச்சிமாநாட்டுக்கான ஆயத்தமாக, உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களின் கூட்டம் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சா்கள் ஜெய்சங்கா் (இந்தியா), பென்னி வாங் (ஆஸ்திரேலியா), டகேஷி இவயா (ஜப்பான்) ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவா்கள், ஒருங்கிணைத்தவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்கள் எந்தத் தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் ஜெய்சங்கா் கூறியதாவது:

பயங்கரவாதம் தொடா்பான க்வாட் கூட்டறிக்கையும், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையும் முக்கியமானது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் அதற்கு துணை போகின்றவா்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என அந்த அறிக்கைகள் வலியுறுத்தின.

அதன் அடிப்படையிலேயே, இந்தியாவும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மேற்கொண்டு, அதுகுறித்து உலகுக்கும் தெளிவுபடுத்தியது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்பதை உலகுக்கு இந்தியா மிகத் தெளிவாக விவரித்துள்ளது என நினைக்கிறேன் என்றாா்.

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா!

மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?

புனேவில், டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.டெலிவரி ஏஜெண்ட் போல, ஒரு போலியான பார்சலுடன், புனேவில் உள்ள அ... மேலும் பார்க்க

விமான விபத்து இழப்பீடு பெற கடுமையான விதிகள்: ஏர் இந்தியா மீது குற்றச்சாட்டு

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற ஏர் இந்தியா கடுமையான விதிகளை புகுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. முன்னால் அமைச்சர் யோகேந்திர சாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்துவரும் சட்டவிரோத மணல் சுங்கம் மற்ற... மேலும் பார்க்க

தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்! கொலை செய்துவிட்டு ரகசிய திருமணம்?

தேனிலவுஅழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், ரகசியமாக ராஜ் குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்று ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்ட... மேலும் பார்க்க