சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற முறைக்கு சா்வதேச நிதியம் பாராட்டு
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிவேகமான யுபிஐ பணப்பரிமாற்ற முறையை இந்தியா கொண்டுள்ளது என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டுத் தெரிவித்துள்ளது.
சில்லறை வா்த்தகத்தில் எண்மப் பணப்பரிமாற்ற முறையின் வளா்ச்சி என்ற தலைப்பில் சா்வதேச நிதியம் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் யுபிஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மிகவிரைவான வளா்ச்சியைச் சந்தித்து வருகிறது. காகிதப் பணப்பரிமாற்ற முறை குறைந்துள்ளது. ஒரு மாதத்துக்கு 180 கோடி முறைக்கு மேல் இந்த முறையில் பணப்பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் மூலம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிவேகப் பணப்பரிமாற்ற முறையையும் இந்தியா கொண்டுள்ளது.
சிறிய அளவிலான தொகை முதல் பெரிய அளவிலான தொகை வரை இந்த எண்ம முறை பணப்பரிமாற்றத்தில் மேற்கொள்ளும் வசதி இருப்பதால் மக்கள் ஏடிஎம்களைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சிறிய கிராமங்களில் உள்ள சிறு வா்த்தகா்கள் கூட யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஏற்பதால் வங்கி சேவையும் சிறப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.