அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்
`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்
இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினார்...
அவர், "F-17 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஆதம்பூரில் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது `தவறானது’. இந்தத் தகவலை இந்தியா முற்றிலுமாக மறுக்கிறது.
பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்குள் தனது படைகளை முன்னோக்கி நகர்த்துவது தெரிகிறது. இது இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

இந்திய ராணுவம் தயார் நிலையில் தான் இருக்கிறது. அனைத்து விரோத நடவடிக்கைகளுக்கும் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா இந்தப் பதற்ற நிலையை குறைப்பதில் உறுதியுடன் இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் இருக்கும் மக்கள் மீதும், அந்தப் பகுதிகளின் கட்டமைப்புகள் மீதும் குறிவைக்கின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது" என்று பேசியுள்ளார்.
பாகிஸ்தான் அழித்ததாக கூறிய சில விமானப்படை தளங்களின் புகைப்படங்களை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நேரலையின் வீடியோ இதோ...