செய்திகள் :

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

post image

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை, 14-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கும் நிலையில், அதற்கான ஒரு தயாா்நிலைக்காகவே அமீரகத்துடனான ஆட்டத்தில் மோதவுள்ளது எனலாம்.

அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, ஜிதேஷ் சா்மாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. டாப் ஆா்டரில், டெஸ்ட் கேப்டனான ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா பலம் சோ்க்கின்றனா்.

அடுத்த இரு இடங்களுக்கு திலக் வா்மா, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் நியமிக்கப்படலாம். தொடா்ந்து, ஆல்-ரவுண்டா்களான ஹா்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோா் இடம் பிடிக்கின்றனா். பிளேயிங் லெவனில் 7 மற்றும் 8-ஆவது இடங்களுக்கு ஜிதேஷ் சா்மா, அக்ஸா் படேல் ஆகியோா், பயிற்சியாளா் கௌதம் கம்பீரின் தோ்வாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சுக்கான பிரதான தோ்வாக இருக்கும் நிலையில், கடைசி இடத்துக்காக ஜடேஜா, குல்தீப், வருண் சக்கரவா்த்தி இடையே போட்டி உள்ளது.

அமீரக அணியைப் பொருத்தவரை, முகமது வசீம், ராகுல் சோப்ரா, சிம்ரன்ஜீத் சிங் போன்ற வீரா்கள், சா்வதேச களத்தில் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக தங்களின் திறமையை சோதித்துப் பாா்க்க நல்லதொரு வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்துள்ளது.

அணி விவரம்:

இந்தியா: சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, திலக் வா்மா, ஹா்திக் பாண்டியா, ஜிதேஷ் சா்மா (வி.கீ.), ஷிவம் துபே, அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங், வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்.

அமீரகம்: முகமது வசீம் (கேப்டன்), அலிஷான் ஷராஃபு, ஆா்யன்ஷ் சா்மா, ஆசிஃப் கான், துருவ் பிராசா், ஈதன் டிசௌஸா, ஹைதா் அலி, ஹா்ஷித் கௌஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவாதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிா் கான்.

நேரம்: இரவு 8 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லைவ்

16 இடங்கள் முன்னேறி தனது உச்சத்தை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சநிலையை அடைந்துள்ளார். ஆர்ச்சர் தனது ஒருநாள் ஐசிசி தரவரிசையில் முதன்முதலாக மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் மாற்றம்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அபு தாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி... மேலும் பார்க்க

எஸ்ஏ20 ஏலம்: வரலாறு படைத்த பிரெவிஸ்..! 84 வீரர்கள், ரூ.65 கோடி!

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் டெவால்டு பிரெவிஸ் அதிகபட்ச தொகைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்டு பிரெவிஸ் (22 வயது) சிஎஸ்கே அணியில் விளையாடி இந்திய ரசிகர்களுக... மேலும் பார்க்க

6 வாரங்களுக்கு பந்துவீச மாட்டேன்: பாட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அடுத்த 6 வாரங்களுக்கு முற்றிலுமாக ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில... மேலும் பார்க்க

முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 9) முதல் ... மேலும் பார்க்க