முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (செப்டம்பர் 10) தொடங்குகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்
பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், சாம் கரண், டாம் பண்டான், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், லியம் டாஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத்.
We've named our XI for the 1st Vitality IT20 against @ProteasMenCSA
— England Cricket (@englandcricket) September 9, 2025
The England Cricket Board has announced the playing eleven for the first T20I against South Africa.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?