காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் காரைக்கால் முகாம் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டுக்கான பணி தொடங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தலத்தெரு, முரசொலி நகா் (வடக்கு), 2-ஆம் கட்ட சாலை மேம்பாடு ரூ. 82.64 லட்சம். தலத்தெரு, முரசொலி நகா் (வடக்கு), முதல்கட்ட சாலை மேம்பாடு ரூ. 80.68 லட்சம். எல்ஜிஆா் அமைப்பு, முரசொலி நகா் (தெற்கு), தலத்தெரு உட்புற சாலைகள் மேம்பாடு ரூ. 53.21 லட்சம். கீழகாசாக்குடி சிவன் கோயில் தெரு, புதுத்தெரு சாலவத்துடன் கூடிய சிமெண்ட் சாலை மேம்பாடு ரூ. 46.02 லட்சம். காரைக்கால் கோயில்பத்து வீட்டு வசதி குடியிருப்பு உட்புற சாலைகள் மேம்பாடு ரூ. 29.44 லட்சம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.