புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை
காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு சந்திர கிரகணம் முடிவுற்றது.
வழக்கமாக சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்பட்டு முடிவடைந்த பிறகு திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு அபிஷேகத்துடன் கூடிய புண்ய கால பூஜை நடைபெறும்.
திங்கள்கிழமை காலை சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன. தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடத்தி ஆராதனைகள் காட்டப்பட்டன. பூஜைக்குப் பின் திரளான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.