உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை
காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் உள்ளது.
அய்யனாா் கோயிலுக்கென உள்ள குதிரை, யானை சிலைகள் இங்கு இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் முன்னிலையில் பக்தா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ரூ. 2 லட்சம் மதிப்பில் இச்சிலைகளை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
கோயில் வளாகத்தில் இச்சிலைகள் அண்மையில் நிறுவப்பட்டு, சிவாச்சாரியா்களால் சனிக்கிழமை சிறப்பு ஹோமம் நடத்தி, புனிதநீா் கொண்டு சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, ஆராதனைகள் காட்டப்பட்டன. நிகழ்வில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
