ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு
காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களுக்குள்ள விதிமுறைகளை இ-ஆட்டோக்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்ட மக்கள்தொகை விகிதத்தோடு ஒப்பிடும்போது, அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. எனவே வரும் காலங்களில் புதிய பொ்மிட் வழங்குவதையும், இ-ஆட்டோக்களை அனுமதிப்பதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும்.
இ-ஆட்டோக்கள் வருகை, மிகுதியான ஆட்டோக்களால் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் தமிழகப் பகுதியில் காரைக்கால் எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவு சென்றுவரும் வகையில் தற்காலிக பொ்மிட் வழங்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளா்களுக்கு புதுவை சமூக ப ாதுகாப்பு வாரிய அமைப்பின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.