புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்கு மக்கள் வரவேற்பு: எம்.எல்.ஏ.
காரைக்கால்: ஜிஎஸ்டி சீா்திருத்தத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனா் என புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது :
பிரதமா் நரேந்திர மோடி தீபாவளி பரிசு காத்திருப்பதாக நாட்டு மக்களுக்கு அண்மையில் கூறியிருந்தாா். அதற்கேற்ப மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செப். 22-ஆம் தேதி அமலாகும் விதமாக பல்வேறு சீா்திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இதனால் கிடைக்கும் பயனை அனுபவிக்க வேண்டும் என பிரதமரும், நிதியமைச்சரும் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம். 12 சதவீத வரியில் இருந்த பொருட்கள் பல 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல பொருட்கள் 28 சதவீத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள், மீனவா்கள், விவசாயிகள், பிற தொழிலாளா்கள், வணிகா்கள், குடும்பத்தினா் என ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பயனடையும் வகையில் அமைந்துள்ளது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றாா்.
பேட்டியின்போது புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் உடனிருந்தாா்.