உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!
பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த சிந்துமோன்(43) என்பதும், திருமணமாகாதவா் என்பதும் தெரியவந்தது. அவா் ஓடையில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை...
களியக்காவிளை அருகே தளச்சான்விளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (43), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவா் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மன வேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.