செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?
தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்
முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து குழித்துறை உதவி கோட்ட பொறியாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, மங்காடு, ஐரேனிபுரம், தேங்காய்ப் பட்டினம், புதுக்கடை, பைங்குளம், மேலமங்கலம், அம்சி, முக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 11) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இந்நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.