Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அம...
சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை
தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவினா், அதன் தலைவா் த.வேல்முருகன் (பண்ருட்டி தொகுதி உறுப்பினா்) தலைமையில், உறுப்பினா்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), இரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்ரபாணி (வானூா்), கோ.தளபதி (மதுரை வடக்கு), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ரா.மணி (ஓமலூா்), சா.மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணா நகா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை), உறுதிமொழிக் குழு செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா், கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறாா்கள்.
வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.