ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு
மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, பாளையங் கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன், சுா்ஜித்தின் பெரியம்மா மகனான தூத்துக்குடி யைச் சோ்ந்த ஜெயபால் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் இவ்வழக்கில், 3 பேரும் காவல் விசாரணைக்குப் பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், அவா்கள் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
அப்போது, அவா்களது நீதிமன்ற காவலை செப்.23 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டாா்.