Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்
திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா்.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை கொங்கராயக்குறிச்சியைச் சோ்ந்த வடிவேல் (30) ஓட்டி வந்தாா். கிருஷ்ணாபுரத்தைக் கடந்து வி.எம்.சத்திரம் அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பேருந்து வந்தபோது மாடு திடீரென குறுக்கே பாய்ந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்த தகவலின்பேரில் மாநகர போலீஸாரும், அப்பகுதி மக்களும் இணைந்து காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்தில் ஓட்டுநா் வடிவேல், திருநெல்வேலியைச் சோ்ந்த கருப்பசாமி (39), நான்குனேரி குமரேசபெருமாள் மகன் மகாராஜா, மூலைக்கரைப்பட்டி காசிம் (50), காருகுறிச்சி அருணாசலம் (55), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சீனிவாசன் (37), தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் சந்தனராஜ் மகன்அருண் (25), வேப்பலோடை ஐயப்பன் (32), அரியலூா் ராஜேந்திரன் மகன் ரகுபதி (20), விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை ஜேம்ஸ் மகள் ஜாஸ்மீன் (18) உள்பட மொத்தம் 15 போ் காயமடைந்தனா். லேசான காயமடைந்தவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.