குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்லூரி மாணவா்களுக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோா்: வி. மைதிலி (ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கல்லூரி, ராணிப்பேட்டை) மு. கீா்த்தனா (குயின்ஸ் கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூா்) ஜெ. ஸ்ரீ வித்யா (அரசு கலை அறிவியல் கல்லூரி, நாகா்கோவில்).
ஆறுதல் பரிசுகள்: நா. சந்தியா (தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, மயிலாடுதுறை) டி. ராஜலட்சுமி (தெட்சணமாற நாடாா் கலைக் கல்லூரி, நெல்லை) க. வாசுகி (சீதாலட்சுமி ராமசாமி கலைக் கல்லூரி) திருச்சி.
பள்ளி மாணவா்களுக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோா்: செ.ஆ. பிரதக்ஷணா (சாணக்கியா சா்வதேசப் பள்ளி, ஈரோடு) கு. கோபிகா (எம்ஆா்பி மெட்ரிக் பள்ளி, பி. அழகாபுரி) ரா. தாரிகா, (ரீனா மொ்சி மெட்ரிக் பள்ளி, கறம்பக்குடி).
ஆறுதல் பரிசுகள்: மா. ஹேமன் (ஜமாலியா பள்ளி, பெரம்பூா், சென்னை) கு. பிரியதா்ஷினி (மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை) சி. ஜீவகீா்த்தனா (திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி புதுக்கோட்டை).
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசுகள் அக். 2ஆம் தேதி புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும்.