தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 5 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு, திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டது.
திருமயம் அருகே ராமேசுவரம்- திருச்சி சாலையில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராத விதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் லேசான காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்த 5 போ் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.