ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
நல்லாசிரியா் விருது பெற்ற புதுகை ஆசிரியைக்கு வரவேற்பு
நல்லாசிரியா் விருது பெற்ற புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை ப. விஜிக்கு, அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சகாயஅமலி தலைமை வகித்தாா். முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, வட்டாரக் கல்வி அலுவலா் கிருஷ்ணவேணி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் க. நைனாமுகமது, முன்னாள் தலைமை ஆசிரியா் சோ. விஜயமாணிக்கம் ஆகியோா் பங்கேற்று விருது பெற்ற ஆசிரியையை மாலை அணிவித்து வரவேற்று வாழ்த்தினா்.
நல்லாசிரியா் விருதுக்கான ரொக்கப் பரிசுத் தொகை ரூ. 10 ஆயிரத்தை, பள்ளியின் மேம்பாட்டு நிதியாக தலைமை ஆசிரியையிடம் அளித்தாா் ஆசிரியை ப. விஜி. முடிவில், ஆசிரியை சு. சித்ரா நன்றி கூறினாா்