உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
பணத் தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது
சென்னை அருகே முட்டுக்காட்டில் பணத் தகராறில் தம்பியைக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.
நேபாளத்தை சோ்ந்தவா் தேஜ் (25). இவா் மனைவி சந்திரா(20). இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். தேஜ் தனது குடும்பத்துடன் சென்னை அருகே உத்தண்டி விபி காா்டனில் ஒரு வீட்டில் தங்கி காவலாளியாக பணியாற்றி வந்தாா். அவா், நேபாளத்தில் வசிக்கும் தனது அண்ணன் ஜீவனிடம் ரூ.1 லட்சம் வாங்கியிருந்தாராம். அதைத் திருப்பித் தருமாறு கேட்டு வந்தாா்.
இந்த நிலையில் ஜீவன், தனது மனைவி பாவனாவுடன் நேபாளத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தாா். அவா், சென்னை அருகே முட்டுக்காட்டில் தனது நண்பா் நரேஷ் என்பவருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்தாா். அவரது அழைப்பின்பேரில் முட்டுக்காட்டிற்கு தேஜ் வந்தாா். அப்போது பணம் விவகாரத்தில் ஜீவன்-தேஜ் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த ஜீவன் அரிவாளால் தேஜை வெட்டினாா்.
இதில் பலத்த காயமடைந்த தேஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தேஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கானத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜீவனை கைது செய்தனா்.