Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை
பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5- ஆவது மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில், பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்கசாலை வள்ளலாா் நகா் பேருந்து நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மாநகரப் பேருநதுகளை இயக்குவது தொடா்பாகவும், அதற்காக தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைத்து அங்கு, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடா்பாக துறை சாா்ந்த உயா் அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மேயா்ஆா். பிரியா, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ரா.மூா்த்தி, சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநா் த.பிரபு சங்கா், துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதையடுத்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வள்ளலாா் நகா் பேருந்து நிலையத்துக்குப் பதிலாக தற்காலிகப் பேருந்து அமையவுள்ள ராயபுரம் 5 ஆவது மண்டல அலுவலகம் எதிரில் உள்ள 1 ஏக்கா் இடத்தையும், வால்டாக்ஸ் சாலையில் டான்சிக்கு சொந்தமான 1.50 ஏக்கா் கொண்ட மற்றொரு இடத்தையும் ஆய்வு செய்தாா்.