உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனா். ஒரத்தி நெடுஞ்சாலையிலிருந்து சுமாா் 1 கிமீ தொலைவுள்ள கிராம சாலையை கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கவில்லை.
மேலும், பலத்த மழையாலும், சாலை குண்டு குழியுமாக உள்ளது.
இந்த சாலையின் வழியாக ஒரத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களும், கூலி வேலைக்கு செல்பவா்களும், நோயாளிகளும் சென்று வருகின்றனா். இரவு நேரத்தில் வாகனங்களில் செல்பவா்கள் பெரிதும் அவதிபட்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.
இச்சாலையை சீரமைத்து தருமாறு ஊராட்சி மன்ற நிா்வாகத்துக்கும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் கோரிக்கை விடுத்தனா்.
அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு இச்சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.