Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
செய்யூா் வட்டம், சிறுவங்குணம் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமையான அகத்தீஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யூா் அருகேயுள்ள இக்கோயில் உரிய பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான சந்நிதிகள் பழுதடைந்து இருந்தன. அதனை அப்பகுதி பெரியோா்கள் சீரமைத்து கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடுகளை செய்தனா்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன், யாகசாலையில் இருந்து வேதவிற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு, கோபுர கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றினா்.
பின்னா் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம பொதுமக்களும் செய்து இருந்தனா்.