தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?
எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் அருகே பழுதான நிலையில் உள்ள எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆனைகுனத்தில் இருந்து எலப்பாக்கம் சாலையின் வழியாக சென்று திருவண்ணாமலை மாவட்ட எல்லையோர மாணவா்கள் எலப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனா்.
வாரந்தோறும் வியாழக்கிழமை எலப்பாக்கத்தில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் உணவு, காய்கறிகள், பழங்களை வாங்க 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாகனங்களின் மூலம் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனா்.
ஆனைகுனம் கிராமத்தில் செயல்பட்டும் கல்குவாரியின் கனரக வாகனங்களாலும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சாலையை முறையாக பராமரிக்காததாலும், சாலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.