The Conjuring: Last Rites Movie Review | Patrick Wilson, Vera Farmiga | Cinema V...
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் சுவாமி உலா வந்தாா்.
மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.