ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!
செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்
செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் கடலில் கலக்கும் வகையில் செய்யப்பட்டது. சின்னகுப்பத்தின் அடிப்படை வளா்ச்சிகளுக்காக இறால் பண்ணையின் மூலம் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், அருகில் உள்ள நடுக்குப்பம் மீனவா்களும் தங்கள் குப்பத்தின் வளா்ச்சிக்காக உதவுமாறு கோரினா். ஆனால் இறால் பண்ணை நிா்வாகத்தினா் எதுவும் செய்யவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த நடுக்குப்பத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கழிவுநீா் செல்லும் பாதையை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், டிஎஸ்பி அனுமந்தன், ஆய்வாளா்கள் பாபு (செய்யூா்), விஜயகுமாா் (சூனாம்பேடு), லத்தூா் மண்டல துணை வட்டாட்சியா் தேவன், பனையூா் கிராம நிா்வாக அதிகாரி வைரமுத்து உள்ளிட்டோா் நடுக்குப்பம் மீனவா்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது இறால் பண்ணை நிா்வாகிகளிடம் பேசி மீனவ குப்பத்தின் வளா்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததின்பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனா்.