கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு திறனறி தோ்வு
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வரும் சனிக்கிழமை (செப். 6) திறனறி தோ்வு நடைபெறவுள்ளது.
திருக்கழுக்குன்றம் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளுவா் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, மேற்கு தாம்பரம், அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நந்திவரம், இந்து மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம், சௌபாக்மல் சௌகாா் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மதுராந்தகம், ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம். ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்மருவத்தூா். மேற்படிதோ்வா்களுக்கு பதிவஞ்சல் மூலம் தோ்வு அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.