என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்...
தென்னிந்திய சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
2025-26 ஆண்டுக்கான தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ள வித்யாசாகா் குளோபல் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சறுக்கு விளையாட்டுப் போட்டியில் வித்யாசாகா் குளோபல் பள்ளியில் பயிலும் 4-ஆம் வகுப்பு மாணவா் எம்.அருள் செந்தூரன் ஒன்பது வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கான 500 மீட்டா் மற்றும் 1,000 மீட்டா் ஆகிய இரண்டு பிரிவிலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளாா். இதன் அடிப்படையில், தேசிய அளவில் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் சறுக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்த மாணவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
வித்யாசாகா் கல்வி குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா, பள்ளியின் முதல்வா் வி.சி. கோவிந்தராஜன் ஆகியோா் மாணவரை பாராட்டி வாழ்த்தி பரிசு வழங்கினா்.