``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில்
மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதனை தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்(ம) சிறுபான்மையினா் நலத்துறை மூலம் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடித்த 5 நபா்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.6,000 மதிப்புள்ள மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரத்தினை ஆட்சியா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, வழங்கல் அலுவலா்/ ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது(பொ) வெங்கடாசலம் , ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

