வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறை...
திருப்போரூா் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சம்
செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரொக்கம், 294 கிராம் தங்கம், 6,400 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கந்தசாமி கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பக்தா்களால் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் எண்ணப்படும். கடந்த ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை (செப். 8) உண்டியலில் பக்தா்களால் செலுத்தப்பட்ட காணிக்கை திறந்து எண்ணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.ராஜலக்ஷ்மி, கோயில் செயல் அலுவலா் கே.குமரவேல், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் முன்னிலையில், பொதுமக்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினா்.
திங்கள்கிழமை பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 தொகையும், நோ்த்திக் கடனாக 294 கிராம் தங்கமும், 6,400 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனா்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தா்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
