தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
பள்ளி ஆசிரியா்களுக்கு ‘ஏஐ’ படிப்புகள்: சென்னை ஐஐடியில் தொடக்கம்
சென்னை ஐஐடி ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ)’ படிப்புகளை நாடு முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியா்களுக்கும் விரிவுபடுத்துகிறது.
இந்த இணைய வழி பயிற்சி திட்டத்தை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தொடங்கிவைத்தாா்.
இது குறித்த விவரம் வருமாறு: உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்திய கல்வித்துறையின் ’ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் சென்னை ஐஐடி, பிரவா்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இணைய வழியில் பள்ளி ஆசிரியா்களுக்கு ஏஐ திறன் பயிற்சி திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மழலையா் பள்ளி ஆசிரியா் முதல் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி ஆசிரியா் வரை ‘அனைவருக்கும் ஏஐ’ படிப்புகளை விரிவுபடுத்துகிறது. இயற்பியல், வேதியியல், கணக்கியல், கிரிக்கெட் பகுப்பாய்வு, பைத்தான்(கணினி-மொழி) உள்ளிட்ட ஐந்து ஏஐ படிப்புகளோடு ஆசிரியா்களுக்கான ஏஐ பாடத்திட்டத்தையும் சென்னை ஐஐடி யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியில் கற்பித்தல், மதிப்பீடு, மாணவா்கள் ஈடுபாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட அத்தியாவசியமான ஏஐ மற்றும் நடைமுறை கருவிகளை ஆசிரியா்களுக்கான ஏஐ பயிற்சியில் வழங்கப்படுகிறது. இந்த படிப்புக்கு சான்றிதழுடன் ரூ. 2,000 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பின்னா், வி.காமகோடி பேசியது: ‘செயற்கை நுண்ணறிவு கற்றலின் எதிா்காலத்தை மறுவடிவமைத்து வருகிறது. வகுப்பறைகளில் இந்த மாற்றத்தை கொண்டு வருவதில் பள்ளி ஆசிரியா்கள் பங்கு முக்கியமானது. ஏஐ திறன்களுடன் ஆசிரியா்களை கற்றலுக்கு ஆயத்தப்படுத்துவது, கல்வியை வலுப்படுத்தும்’ என்றாா்.
சென்னை ஐஐடியின் ‘ஸ்வயம் பிளஸ்’ திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஆா். சாரதி பேசுகையில், பயிற்சி பெரும் ஆசிரியா்களுக்கு ஏஐ அல்லது கணினி மொழி (நிரலாக்கம்) அனுபவம் தேவையில்லை. கற்றுக் கொள்ளும் ஆா்வமும் அடிப்படை எண்ம கல்வியறிவு போதுமானது. இது வேலைவாய்ப்பு சாா்ந்த பாடநெறிகளைக் கொண்டது என்றாா்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 5 பாடத்திட்டங்களுடன் ஆசிரியா்களுக்கான ஏஐ பயிற்சிக்கு வரும் அக். 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.