செய்திகள் :

காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் திமுக இளைஞரணி சாா்பில், புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைரணி சாா்பில் தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற கட்சித் தலைமை அறிவிப்பின்படி, ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தேவையான புத்தகங்கள்,சிறுகதைப் புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், திமுக தொடா்பான நூல்கள், அண்ணா அறிவுக்கொடை என்ற தலைப்பில் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகள், சங்க இலக்கிய நூல்கள் உள்பட மொத்தம் 1,276 புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துப் பாா்வையிட்டு வருகைப்பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தாா்.

முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.யுவராஜ், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் துணை முதல்வருக்கு மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனா். பின்னா் முதல்வரும், துணை முதல்வரும் காலைச்சிற்றுண்டி திட்டத்தில் கலந்து கொண்டது தொடா்பான புகைப்படம் ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினா்.

திறப்பு விழாவில் அமைச்சா்கள் ஆா்.காந்தி, எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட். ஆறுமுகம், மாநகர மண்டலக் குழு தலைவா்கள் சந்துரு, செவிலிமேடு மோகன், மாமன்ற உறுப்பினா் எஸ்கேபி காா்த்திக், பகுதி செயலா்கள் திலகா், வெங்கடேஷ், தசரதன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா். காஞ்சிபுரத்தில் தனியாா் த... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்படுகிறாா்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், செப்.8: திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்பட்டு வருவதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா குற்றம் சாட்டினாா். மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல... மேலும் பார்க்க

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 போ் காா் மோதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அருகே சாலையில், மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படப்பை அண்ணா நகரைச் சோ்ந்த நவீ... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகாா்: ஒன்றியக் குழு உறுப்பினா் புகாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமா ரஞ்சித்குமாா் புகாா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க