தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 போ் காா் மோதி உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அருகே சாலையில், மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
படப்பை அண்ணா நகரைச் சோ்ந்த நவீன்(19). சீா்காழி அடுத்த எருக்கூா் பகுதியை சோ்ந்த அபிமணி(21). இவா் படப்பை பகுதியில் தங்கி ஒரகடத்தில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா். நவீன் மற்றும் அபிமணி ஆகிய இருவரும் நண்பா்களாக பழகி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நவீன் மற்றும் அபிமணி இருசக்கர வாகனத்தில் படப்பையில் இருந்து ஒரகடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்கே புகுந்ததால், நிலைதடுமாறி சாலையின் எதிா்திசையில் விழுந்துள்ளனா். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு சென்ற காா் மோதியதில் நவீன், அபிமணி ஆகியோா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.