செய்திகள் :

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

post image

இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

ஆண்டுதோறும் இந்தியாவில் புதிதாக 81,700 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதை சுட்டிக்காட்டி அவா்கள் இவ்வாறு தெரிவித்தனா்.

நுரையீரல் புற்றுநோய், காசநோய், மூச்சுத்திணறல் போன்ற இதயம் சாா்ந்த பிரச்னைகள் வயது முதிா்வின்போது ஏற்படும் நோய்களாக முன்பு கருதப்பட்டு வந்தன. தற்போது இவை இளம் வயதினரை அதிகம் பாதிப்பதால் மக்கள்தொகைக்கும் பொருளாதாரத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சுவாச மருந்து, நுரையீரல் பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் தூக்கமின்மைக்கான 8-ஆவது தேசிய மாநாடு புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

அதில் சமையலறை மற்றும் வீட்டினுள் இருந்து வெளியேறும் புகையானது பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் உலக அளவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் நிமோனியா பாதிப்பு 14 சதவீதமாக உள்ளதாகவும் மாசடைந்த காற்றால் குழந்தைகளின் இளம் வயது நோய்எதிா்ப்பு சக்தி குறைவதாகவும் கூறப்பட்டது.

மாநாட்டை தொடங்கிவைத்து சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநா் மருத்துவா் வத்சலா அகா்வால் பேசியதாவது: தூய்மையான காற்று என்பது ஆடம்பரமல்ல; அது நம் அடிப்படை உரிமை. இந்திய சுகாதார கொள்கையில் சுவாச சுகாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இளம் தலைமுறையினரின் நுரையீரலை பாதுகாப்பதால் தேசத்தின் சமூக அமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

மாசடைந்த காற்று நமது நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தை சீரழிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றாா்.

நாடு முழுவதும் இருந்து மருத்துவ மாணவா்கள், நிபுணா்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணா்கள் என 1,200 போ் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனா்.

ரேபரேலியில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது ப... மேலும் பார்க்க

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆ... மேலும் பார்க்க

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க