செய்திகள் :

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

post image

நமது நிருபர்

காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 8-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதற்கு ஆதரவாக கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

அதன் விவரம்: மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில்போட ஆளுநருக்கு அரசியல் சாசனம் எந்த ஓர் அதிகாரத்தையும் வழங்கவில்லை.

நியாயமான கால வரம்புக்குள் அல்லது குறுகிய காலத்துக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும்.

அரசியல் சாசனப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய குடியரசுத் தலைவரின் முடிவு என்பது தன்னிச்சையாகவோ, தனது விருப்புரிமையின்படியோ எடுத்தது அல்ல. ஏனெனில், தன்னிச்சையாக விளக்கம் கேட்க குடியரசுத் தலைவருக்கு அரசமைப்பில் அதிகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது என்பது மத்திய அமைச்சரவை மற்றும் அதன் தலைவரான பிரதமரின் ஆலோசனையின்படிதான்.

எனவே, குடியரசுத் தலைவரின் விருப்புரிமை உள்ளது என்ற பேச்சுக்கே இட மில்லை.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய முடியாது. அவ்வாறு மீற முடியும் எனக் கருதுவது சரியானது அல்ல. எனவே, மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்கள் புதன்கிழமையும் தொடரும் என நீதிபதிகள் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்க... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா்... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லையில் 2 ஆண்டுகளில் 1,000 கிலோ தங்கம் கடத்தல்: அமலாக்கத் துறை

இந்திய-சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் ரூ.800 கோடி மதிப்பிலான 1,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. 2023, 2024-இல் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்... மேலும் பார்க்க