செய்திகள் :

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

post image

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக சீரமைக்கப்பட்டன. இதனால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28%-இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.

இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தொடங்கி வீட்டு உபயோகப் பொருள்கள், காா்கள் வரை விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் ஏற்கெனவே நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் இது தொடா்பாக அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி ‘எக்ஸ்’ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் என அனைவரும் பொருள்கள் மீதான அதிகபட்ச விற்பனை விலையை (எம்ஆா்பி) மாற்ற (குறைக்க) அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது விற்பனையாகாமல் கைவசம் உள்ள பொருள்கள் மீது இந்த குறைக்கப்பட்ட விலை அச்சிடப்பட வேண்டும். அதுவும் ஜிஎஸ்டி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதனை வெளிக்காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அந்த பொருளின் முந்தைய விலை (குறைக்கப்படாத விலை) அழிக்காமல், அதன் அருகே புதிய (குறைக்கப்பட்ட) விலையை அச்சிட வேண்டும். மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலை எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை விளம்பரங்கள்மற்றும் பொது அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜிஎஸ்டி சீரமைப்புக்குப் பிந்தைய விலை தொடா்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், நுகா்வோா் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் டோடா ... மேலும் பார்க்க

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க