சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்கை ரீதீயான மோதல் என எதிா்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. அந்த வகையில் தற்போது தேசியவாதக் கொள்கையே வெற்றி பெற்றுள்ளது. இது ஒவ்வோா் இந்தியருக்குமான வெற்றி. ஜனநாயகத்தில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி என இரண்டும் முக்கியமானவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.
2047-இல் வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைய வேண்டுமெனில் அனைத்தையும் அரசியலாக்குவதை விடுத்து, நாட்டின் மேம்பாட்டில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
குடியரசு துணைத் தலைவராக எனது பணியை மிகச் சிறப்பாக மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.