செய்திகள் :

இன்னும் 2 ஆண்டுகள் விளையாட கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் திட்டம்!

post image

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆஸி. பேஸ் டிரையோக்களின் கடைசி தொடராக ஆஷஸ் டெஸ்ட் இருக்காது எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை ’ஆஸி. பேஸ் டிரையோ’ என அழைக்கப்படுகிறார்கள்.

மும்மூர்த்திகள்...

ஆஸ்திரெலிய அணியின் தூண்களாக ஸ்டார்க் (35), கம்மின்ஸ் (32), ஹேசில்வுட் (34) இருக்கிறார்கள். மூவருமே முப்பதைக் கடந்ததால் இன்னும் எத்தனை வருஷன் விளையாடுவார்கள் எனத் தெரியவில்லை.

சமீபத்தில் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஹேசில்வுட் காயத்தால் அவதியுறுகிறார். பாட் கம்மின்ஸ் நியூசி., இந்தியாவுடனான வெள்ளைப் பந்து தொடரை காயம் காரணமாக புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில், ஹேசில்வுட் சென் ரேடியாவில் இது குறித்து பேசியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம்...

தற்போதைய நிலைமைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தொடருக்கு பின்பு உட்கார்ந்து இது குறித்து சிந்திப்போம்.

நாங்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அடுத்த இரண்டாண்டுகளில் அதிகமான போட்டிகள் வரவிருக்கின்றன.

ஆஷஸ் தொடர் மட்டுமல்லாமல் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகளும் இருப்பதால் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் ஆர்வமாக இருக்கிறது.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை...

எங்களிடம் இன்னும் சில ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மிச்சம் இருக்கிறதென நினைக்கிறேன்.

கடைசி சில வருடங்களில் வெள்ளைப் பந்தில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திலும் நல்ல ஷீல்டு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாடுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றார்.

ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பரில் நடைபெற இருக்கிறது.

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.இந்திய அணியைப் பொருத்தவரை, 14-ஆம் தேதி பாகிஸ்தானை சந்தி... மேலும் பார்க்க

முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 9) முதல் ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என இந்திய டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டிகளில் இன்று தொடங்குகிறன. இந்தியா தனது முதல் போட்டியில் யுஎஇ அணியுடன் நாளை (... மேலும் பார்க்க

பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு வீரர்களை அவமதிக்காதீர்கள்: பிரண்டன் மெக்கல்லம்

பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு பேசுவது வீரர்களை அவமதிப்பதாக உணர்வதாக இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிர... மேலும் பார்க்க

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது. கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்... மேலும் பார்க்க