இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
இந்தியா அழித்த பயங்கரவாத தலைமையகம் மறுகட்டமைப்பு: பாகிஸ்தான்
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் அழிக்கப்பட்ட பாகிஸ்தானின் முரித்கே பகுதியில் உள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீண்டும் கட்டமைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை உறுதியளித்தது.
2008-இல் மும்பையில் பயங்கரவாத தாக்குதலை லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இதன் கிளை பிரிவான ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் 9 இடங்களில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், முரித்கேயில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத முகாம், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் உள்ளிட்டவை குறிவைத்து தகா்க்கப்பட்டன.
முரித்கேயில் உள்ள மசூதி மற்றும் கல்வி வளாகம் தகா்க்கப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
இதனிடையே, பாகிஸ்தானுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் கடனுதவி வழங்க கடந்த வாரம் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது. இந்த நிதியை பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் இந்த முடிவை ஐஎம்எஃப் மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.
இந்தச் சூழலில் முரித்கே பகுதியில் அழிக்கப்பட்ட மசூதிக்கள், ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீண்டும் கட்டமைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை உறுதியளித்தது.