மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி தமிழக அரசு சொன்னது என்ன? தெற்கு ரயில்வே
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பங்கு என்ன? ஆம் ஆத்மி
இந்தியா கூட்டணியில் தனது பங்கு என்ன என்பதையே காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள தவறிவிட்டது என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தில்லியின் பல்வேறு பகுதிகளில் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (ஜன. 13) சீலம்பூர் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அரவிந்த் கேஜரிவால் ஆட்சி குறித்து விமர்சித்தார்.
இதனிடையே சீலம்பூர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
''தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவாலுக்கு நாம் உதவ வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கேட்டுக்கொண்டுள்ளார். பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் ஒற்றைக் குறிக்கோள். ஆனால், துரதிருஷ்டவசமாக இக்கூட்டணியின் பெரிய கட்சியான காங்கிரஸ் இதனை மறந்துவிட்டது.
கூட்டணியின் குறிக்கோளை புரிந்துகொள்வதில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. பிராந்திய ரீதியாக வலுவாக உள்ளவர்களுக்கு இடமளிக்கத் தவறிவிட்டது. இது கூட்டணிக்குத் தடையாக உள்ளது.
ஹரியாணாவில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. பிகார், உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அழுத்தம் கொடுக்கிறது. இங்கு வலுவான பிராந்திய கட்சிகளுக்கு இடமளிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனை சரத் பவார் புரிந்துகொண்டார்'' என சஞ்சய் சிங் குறிப்பிட்டார்.