ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று பிரதமர் அலுவலகத்தில் போர்ச் சூழல் குறித்து ஐந்து மணி நேரம் ஆலோசனை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின் முப்படைத் தளபதிகள் மற்றும் முப்படைத் தலைமை தளபதி அனில் சௌகான் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின்போதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து 3 மணி நேரமாக இந்த ஆலோசனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.