செய்திகள் :

"இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது; நாங்கள் வெறும்.."- அஸ்வின் பளீச்

post image

கிரிக்கெட் என்னதான் குழு ஆட்டமாக இருந்தாலும், 11 பேரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்றாலும் தனிமனித துதிபாடலே அதிகமாக இருக்கிறது. அதுவும், கிரிக்கெட் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரும் வணிகமாக்கப்பட்ட இந்தியாவில் இந்த சூப்பர் ஸ்டார் கலாசாரம் உச்சம்.

தோனி - கோலி - ரோஹித்

உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் வீரர் மோசமாக சொதப்பினாலும் கூட அணியிலிருந்து நீக்க முடியாத அளவுக்கு செலக்சன் கமிட்டி வரை வணிகத்தோடு அது பரவியிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ரோஹித் அஸ்வின்

தனது இந்தி யூடியூப் சேனலில் இது குறித்து பேசியிருக்கும் அஸ்வின், ``இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை முதலில் சாதாரண நிலைக்கு கொண்டு வரவேண்டும். இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வழக்கத்தை, பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது. நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் தானே தவிர, நடிகர்களோ சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள். சாதாரண மக்களை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள் நம்மைத் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியவராக இருக்க நாம் வேண்டும்." என்று கூறினார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் த... மேலும் பார்க்க

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்... தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50... மேலும் பார்க்க

CT: 2013 `Magic' தோனி ; 2017 `Unlucky' கோலி - என்ன செய்யப்போகிறார் ரோஹித்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியிருக்கிறது. கடைசியாக நடந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா பைனலுக்குச் சென்றிருந்தது. அதில், ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி. இதனா... மேலும் பார்க்க

BANvIND: கேட்ச்சை விட்ட ரோஹித்; ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்சர் படேல்!' - என்ன நடந்தது?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் அக்சர் படேல் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு உண்டானது. கேப்டன் ரோஹித் சர்மா கேட்ச்சை ட்ராப... மேலும் பார்க்க

Dhoni: 'என் வழி.. தனி வழி' - மாஸாக பஞ்ச் டயலாக் பேசிய தோனி; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித... மேலும் பார்க்க