லெபனான்: ஒப்பந்ததை மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல்! 3 பேர் பலி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி காலமானாா்
திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிஎஸ்.முத்துராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
திருப்பத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், தமிழ்நாடு விவசாய சங்க முன்னாள் மாவட்டச் செயலருமான எஸ்.முத்துராமலிங்கம் உடல்நலக்குறைவால் காலமானாா். திருப்பத்தூா் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.உமாதேவன், ராம.அருணகிரி, சிவகங்கை குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட ஒன்றியப் பொறுப்பாளா்கள், அனைத்துக் கட்சி பிரமுகா்கள், வா்த்தக சங்கத்தினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், இவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.